logo
நிகழ்வுகள்

இருளர் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு  வந்ததற்கு பாராட்டு. அதே நேரத்தில்  வன்மத்தை திட்டமிட்டு வளர்த்தெடுக்காதீர்கள்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் வசிக்கும் 1300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வேண்டி வீரவாஞ்சி முருகன் மலையில் இன்று (26.09.201 ஞாயிறு) நடந்த போராட்டம். இலங்கை ஏதிலியர்களை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என ஒன்றிய அரசு கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது - வ.கெளதமன் பேட்டி. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்களுடன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் ரத்த உறவுகள், தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன் சந்திப்பு. திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அப்புறப்படுத்துங்கள். ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தனது மலர் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அப்புறப்படுத்துங்கள்.

Sep 9th 2021

தமிழ்ப் பேரரசு கட்சி, "சோழன்குடில்"

15 தமிழர்களை ஈவு இரக்கமற்ற முறையில் துள்ள துடிக்க பச்சை படுகொலை செய்வதற்கு காரணமாக இருந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தை திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி தமிழ்நாடு அரசு உடனடியாக சிறப்புச் சட்டமியற்றி  நிரந்தரமாக அப்புறப்படுத்துமாறு தமிழ் பேரரசு கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

22.05.2018 அன்று 17 வயதே நிரம்பிய எங்கள் வீட்டுப்பிள்ளை ஸ்னோலின் உள்ளிட்ட 13 தமிழர்களும் காவல்துறையின் சில காட்டுமிராண்டிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதே நாள் இரவில் அடித்தும் சுடப்பட்டும் வரதராஜ் மற்றும் ஜஸ்டின் உள்ளிட்ட இருவர் சில நாட்கள் கடந்து தங்கள் உயிர்களைப் பலி கொடுத்தார்கள். இந்தக் கொடூரச் சம்பவம் நடந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் கூட சுட்டது யார்? சுடச் சொன்னது யார்? என்ற உண்மையை மறைப்பதுதான் மிகப்பெரிய ஜனநாயக கேலிக்கூத்து. அதுவும் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொலைக்காட்சியில் பார்த்துதான் நானே தெரிந்து கொண்டேன் என்று சொன்னது மட்டுமல்லாமல் நீதியரசர் அருணா ஜெகதீசன் அவர்களுடைய அறிக்கையும் இதுவரை வெளிவராதது விசித்திரமானதாகத்தான் படுகிறது.

தூத்துக்குடியில் 13 தமிழர்களைச் சுட்டுக்கொன்ற இரண்டு மணி நேரத்தில் மாணவர்களுடனும் இளைஞர்களுடனும் ஒன்று சேர்ந்து எங்களின் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து அனில் அகர்வால் கொடும்பாவியை நாங்கள் எரித்தபோது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கொடும்பாவியைத்தான்  எரித்தோம்  என்று பொய்யான குற்றம் சுமத்தி  நீதியரசர் முன்பு எங்களை நிறுத்தினர். நாங்கள் உண்மையைச் சொன்னதும் நீதியரசர் புரிந்து கொண்டார். ஆனாலும், காவல்துறை நம்பிக்கை தளராமல் நான் காவல்துறையின் வாகன சக்கரங்களைத் தீ வைத்துக் கொளுத்தினேன் என்று மீண்டும் பொய் குற்றம் சுமத்தினர். நீதியரசர் நீங்கள் கைது செய்து வாகனத்தில் ஏற்றிய பிறகு கௌதமன் எப்படி ஐயா உங்கள் வாகனத்திற்குத் தீ வைத்திருக்க  முடியும் என்று நாக்கை பிடுங்குவது போல் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு கொடும்பாவியைக் கொளுத்திய குற்றத்திற்காக பத்துக்கும் மேற்பட்ட எங்களை 15 நாட்கள்  நாட்கள் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்கள். இதுவும் ஒரு வகையில் விசித்திரமானதுதான்.

 இன்னும் எத்தனையோ விசித்திரங்கள் நடந்திருந்தாலும் நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்துவது ஒன்றுதான் தமிழினத்திற்கு நன்மை பயக்கும் ஒரு செயலாக இருக்க முடியும். அதற்கு ஒரே வழி திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் சொல்லியபடி தமிழ்நாடு சட்டமன்ற நடப்பு கூட்டத் தொடரிலேயே உயிர்ச் சூழலையும் தூத்துக்குடி மாவட்ட மக்களையும் காத்திடும் வகையில் நிரந்தர தீர்வாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். 2018 மே 22 தூத்துக்குடி படுகொலைக்குக் காரணமான குரூர கொலை குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். ஒன்றிய பா.ஜ.க அரசு மற்றும் அதிமுக அரசின் பயங்கரவாதத்தால் கொலையுண்ட தியாகிகளின் நினைவாக தூத்துக்குடியின் மையப்பகுதியில் நினைவகம் அமைத்திட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நடத்திய தமிழர்களின் மீதான அனைத்து வழக்குகளையும் தமிழ்நாடு அரசு திரும்ப பெறவேண்டும் என்று தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி,
"சோழன்குடில்"
09.08.2021

logo