logo
நிகழ்வுகள்

இருளர் வாழ்வை வெளிச்சத்திற்கு கொண்டு  வந்ததற்கு பாராட்டு. அதே நேரத்தில்  வன்மத்தை திட்டமிட்டு வளர்த்தெடுக்காதீர்கள்.  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரில் வசிக்கும் 1300க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வேண்டி வீரவாஞ்சி முருகன் மலையில் இன்று (26.09.201 ஞாயிறு) நடந்த போராட்டம். இலங்கை ஏதிலியர்களை சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என ஒன்றிய அரசு கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது - வ.கெளதமன் பேட்டி. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் அவர்களுடன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் ரத்த உறவுகள், தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச்செயலாளர் வ.கௌதமன் சந்திப்பு. திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அப்புறப்படுத்துங்கள். ஐயா சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தனது மலர் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.

“இனம் காக்க, மொழி காக்க, வளம் காக்க அரசியல் சக்தியாக உருவெடுக்கிறோம்”
இயக்குநர் வ.கௌதமன் அறிவிப்பு

தமிழ்நாட்டின் பல்வேறு போராட்டக் களங்களில் தமிழக மக்களின் கலை, கலாச்சாரம், இயற்கைவளம், மொழி, கல்வி, தொழில், வேலைவாய்ப்பு உரிமைகள் உள்பட பல்வேறு அரசியல் உரிமைகளுக்காக உக்கிரமான போராட்டக்களங்களில் சமரசமின்றி போராடிவரும் நாங்கள், அதைவிட மிகப்பரந்த அரசியல் களத்திலும் எங்கள் போராட்டத்தை விரிவாக்க முடிவுசெய்திருக்கிறோம்.

களப்போராட்டங்களில் தொடர்ந்து நின்றுகொண்டிருக்கும் அதேவேளை உரிமைகளை வென்றெடுக்க அரசியல் களத்திலும் பங்கேற்கவேண்டும் என்பதே எங்கள் கொள்கையாகும். அரசியல் என்கிற ஆயுதத்தை கொண்டே நமது உரிமைகள் அனைத்தையும் மத்திய, மாநில ஆளும் சக்திகள் ஈவிரக்கமின்றி வேரறுக்கின்றன. எனவே அதே அரசியல் என்னும் ஆயுதத்தை கையிலெடுத்தே நமது உரிமைகளை மீட்டெடுக்க விரும்புகிறோம். இதன் அடிப்படையில், எங்கள் மக்களின் ஆதரவோடு மாணவர்களும் இளைஞர்களுமான நாங்கள் உறுதியாக முடிவெடுத்து, தமிழ்ப் பேரரசுக் கட்சி என்கிற புதிய கட்சியை தொடங்குவதை இன்று பெருமிதத்தோடு அறிவிக்கிறோம்.

தமிழக மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் இருந்தாலும், சனநாயக யுத்தக் களத்தில் நாங்கள் புதிய சக்தியாக உறுதியாக உருவெடுப்போம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ‘சொல்லுக்கு முன் செயல்’ என்பதே இதுவரை எங்களது அரசியல் வியூகமாக இருந்துவருகிறது. இனிமேலும் அதுவே தொடரும். எனவே தூய்மையான எங்கள் செயல்பாட்டால் தமிழக மக்களின் பேராதரவைப் பெறுவோம். நாங்கள் கட்சியை ஆரம்பித்துவிட்டு ஆதரவைத் தேடிப் போகவில்லை. மாறாக தமிழ்நாட்டு மக்களின் ஆதரவைப் பல களங்களில் கண்டு, கடுமையான அடக்கு முறைகளுக்கு உள்ளான நிலையில்தான் இம்முடிவை எடுத்திருக்கிறோம். ஏறு தழுவுதல் (ஜல்லிக்கட்டு) போராட்டத்தில் போராடி வெற்றிகண்ட இளைய தலைமுறையினரான நாங்கள் அரசியல் களத்திலும் வெற்றிபெறுவோம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த எங்கள் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம்.

உலகின் தொன்மையான இனத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம். ஆனால் இன்று நமது நீர் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன, நிலம் மலடாக்கப்பட்டிருக்கிறது. நமது விவசாயிகள் வாழவழியின்றி தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். மீனவர்களின் மீன்பிடி உரிமைகள் பறிக்கப்பட்டு அவர்கள் நித்தம் நித்தம் கொல்லப்படுகிறார்கள். எங்கள் மாணவர்களின் கல்வி, சமூகநீதி உரிமைகள் மறுக்கப்படுகின்றன.

நமது தமிழ் மொழிக்கு எதிராக இந்தி, சமஸ்கிருத திணிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. பழந்தமிழர் வரலாறு, கலை, இலக்கியம், பண்பாட்டு உரிமைகள் மறைக்கப்படுகின்றன. நமது எல்லா இயற்கைவளங்களும் அழிக்கப்பட்டு கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இந்த கொடுமைகளையெல்லாம் எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடிவருகிறோம்.

அத்துடன் செம்மரம் வெட்டச்சென்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு இருபது தமிழர்கள் ஆந்திராவில் கொல்லப்பட்டது, ஈழத்தமிழர் வாழ்வுரிமை, ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன், மணல்கொள்ளை, நீட், ஏழு தமிழர் விடுதலை என பல போராட்டக்களங்களில் உறுதியோடு போராடியிருக்கிறோம்.

அவனியாபுரத்தில் நின்று நாங்கள் நடத்திய அறவழிப்போராட்டங்கள் முதல் ஐ.நா.வரை சென்று நாங்கள் நடத்திய அறிவாயுதப் போராட்டம் வரை தமிழர்களின் நலன்களுக்காக இடைவிடாது போராடிவந்திருக்கிறோம்.

நீண்ட நெடுங்காலமாக எங்களோடு வாழும் பிற மொழியினரை தாயன்போடு இணைந்துக்கொண்டும், சாதி மத வேறுபாடற்ற சமத்துவச் சமுதாயத்தை படைக்கும் உறுதியோடும் நாங்கள் எங்கள் அரசியல் பயணத்தைத் தொடங்குகிறோம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெற்காசியாவையும் தென்கிழக்காசியாவையும் அரசாண்ட நமது ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் பெரும் வரலாற்றை நினைவுப்படுத்துகிற தலைநிமிர்வு அடையாளமாகவே தமிழ்ப் பேரரசுக் கட்சி என பெருமையோடு பெயர் சூட்டியிருக்கிறோம்.. மேலும், தமிழர் தந்தை சி பா ஆதித்தனார் அவர்களின் தமிழ்ப் பேரரசுக் கனவையும் நாங்கள் நெஞ்சில் ஏந்துகிறோம்.

சேர சோழ பாண்டியர்களின் சின்னங்களான வில்-புலி-மீனை மைய இலச்சினையாகவும் புரட்சியைக் குறிக்கும் சிவப்பில் வீரத்தைக் குறிக்கும் மஞ்சள், பசுமையைக் குறிக்கும் பச்சை, கடலையும் வானத்தையும் குறிக்கும் நீலவட்டங்களை கொள்கையின் அடையாளங்களாகவும் கொண்டு, புதிய கொடியையும் உருவாக்கி அறிமுகப்படுத்துகிறோம்.

தமிழ் இனம் காக்க, தமிழ் மொழி காக்க, தமிழர் வளம் காக்க, உலகத் தமிழர்களின் பேராதரவோடு உறுதியான எங்கள் பயணத்தைத் தொடங்குகிறோம்.

எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும்

எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்

வெல்வோம்.

பொறுப்பாளர்கள்

தமிழ்ப் பேரரசு கட்சி

கல்வி

கல்வி பொறுப்பாளர்

தமிழ்ப் பேரரசு கட்சி

தமிழ்

கல்வி பொறுப்பாளர்

தமிழ்ப் பேரரசு கட்சி

தமிழ்

கல்வி பொறுப்பாளர்

தமிழ்ப் பேரரசு கட்சி

தமிழ் பேரரசு

மாவட்ட பொறுப்பாளர்

logo